மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவசம்

 

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்தார். இந்தக் காப்புறுதி நுகர்வோருக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும், அது மூன்று இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையது எனவும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த வசந்த சமரசிங்க, கூட்டுறவு இயக்கத்தை 'திசைகாட்டி'யின் பாரிய மறுசீரமைப்புத் திட்டத்தின் ஊடாக முன்னெடுத்து வருகிறோம்.அதன் ஊடாக ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு 'கோப் சிட்டி'யை ஆரம்பிப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம். அத்துடன் நகரப் பகுதிகளில் பாரிய கோப் சிட்டிகளைப் பராமரித்துச் செல்வதற்குத் தேவையான கடன் தொகையை, குறைந்த வட்டியின் கீழ் வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் கூட்டுறவு ஊழியர்களுக்குத் திருப்திகரமான சம்பளம் மற்றும் ஆயுள் காப்புறுதி உள்ளிட்ட வசதிகளை வழங்கி, இந்தக் கூட்டுறவு இயக்கத்தைப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post