Type Here to Get Search Results !

வயிற்றில் 10 செ.மீ கத்தரிக்கோல்! சத்திரசிகிச்சையால் நேர்ந்த விபரீதம்



 இந்தியாவின், கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரின் வயிற்றில் 10 செமீ நீள கத்தரிக்கோல் இருப்பது கண்டறியப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள - ஆலப்புழா புன்னபுரா பகுதியை சேர்ந்த உஷா ஜோசப் (51) என்பவரே இந்த நிலையை எதிர்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் தெரிய வருகையில், குறித்த பெண் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணி புரிந்து வருவதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.இதன்படி பெண்ணுக்கு 2021ம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு, தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குறைய வில்லை என கூறப்படுகிறது.

ஆண்டு கணக்கில் மாத்திரை சாப்பிட்டு வந்ததால் அவருக்கு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்பட்டு, சிறுநீரில் ரத்தம் வெளியேறியுள்ளது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே-வில், அவர் வயிற்றில் 10 செ.மீ நீள கத்தரிக்கோல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்பிறகு நடந்த விசாரணையில், 2021ம் ஆண்டு அறுவை சிகிச்சையின்போது, அவர் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த விவகாரம் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

AD