2026 முதல் சூரிய கிரகணம் ; உலகம் காத்திருக்கும் நெருப்பு வளையம்

 2026ஆம் ஆண்டின் முதல் Annular Solar Eclipse of 17 February 2026 நாளை (17.02.2026) நிகழவுள்ளது.

“நெருப்பு வளையம்” என அழைக்கப்படும் இந்த அபூர்வ காட்சியை காண விண்வெளி ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்த கிரகணத்தின் பிரதான பாதை Antarctica மற்றும் தெற்கு அரைக்கோளப் பகுதிகள் வழியாகச் செல்லும் என்பதால், இதனை இந்தியாவில் காண முடியாது என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நேரப்படி (IST) மதியம் சுமார் 3:26 மணிக்கு தொடங்கும் இந்த கிரகணம், இரவு 7:57 மணி வரை நீடிக்கும். இதன் உச்சக்கட்டம் (Maximum Eclipse) 12:12 UTC மணியளவில் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அண்டார்டிகாவில் முழுமையாகத் தெரியும் இந்த வளைய கிரகணத்தை South Africa, Zimbabwe, Tanzania, Namibia மற்றும் Mauritius போன்ற நாடுகளில் பகுதி நேரக் கிரகணமாகக் காண முடியும்.

சந்திரன் பூமியிலிருந்து ஒப்பீட்டளவில் அதிக தொலைவில் இருக்கும் நிலையில் சூரியனை மறைக்கும் போது, சூரியனின் விளிம்புகள் மட்டும் பிரகாசமான மோதிரம் போலத் தெரியும்.

இதுவே “நெருப்பு வளையம்” என அழைக்கப்படும் வளைய சூரிய கிரகணத்தின் தனிச்சிறப்பாகும். ஜோதிட ரீதியாக, இந்த கிரகணம் கும்ப ராசியில், அவிட்டம் நட்சத்திரத்தில் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

ராகு–சூரியன் சேர்க்கையாகக் கருதப்படும் இந்த காலப்பகுதியில், குறிப்பிட்ட ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post