3 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொன்று விட்டு 28 வயது இளம் தாய் எடுத்த முடிவு-வெளியான அதிர்ச்சி காரணம்

 

இந்தியாவில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் 28 வயது பெண், தனது 3 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்து தானும் விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பாகல்கோட் பதாமி தாலுகாவில் உள்ள கிராமம் ஹிரேமுச்சல்குட்டா கிராமம். இந்த கிராமத்தில் ரூபா ஹனுமன்த் கவுடர் (வயது 28) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு 5, 4, மற்றும் 2 இரண்டு வயதில் மூன்று குழந்கைள் இருந்தன. இவருக்கும் இவரது கணவர் மற்றும் மாமியாருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடைபெறு வழக்கம். சம்பவத்தன்று இந்த சண்டை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த சண்டையால் விரக்தியான ரூபா தனது குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி மூன்று குழந்தைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தூக்கில் போட்டு கொன்றுள்ளார். அதன்பின் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விசம் அருந்தியுள்ளார். ஆனால், ரூபா உயிர்ப்போகவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது என்ற எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாய் பதிய வைக்கப்பட வேண்டும். தற்கொலைக்கான உளவியல் காரணங்கள் சில உள்ளன. அதன் முதன் நிலையானது கொலை செய்ய விரும்புவது. 2-வதாக கொலை செய்யப்படுவதை விரும்புவது. 3-வதாக தன்னையே கொலை செய்து கொள்வது. ஒருவர் மீது ஏற்படும் வெறுப்பில் அவரை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும் போது கொலையாக மாறுகிறது. அல்லது, நம்மால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தில் தற்கொலையை தேடிக் கொள்கின்றனர். எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது. அந்த தீர்வை நோக்கி மனிதர்கள் தங்களின் மனதை கொண்டு செல்வது கிடையாது. சில பெரிய தலையீடுகள் தற்கொலையை பெருமளவு தடுத்துள்ளன. தற்கொலை முயற்சி செய்தவர்களுக்கு சரியான நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்தல், குழப்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை கிடைக்க செய்தல் போன்றவற்றால் தற்கொலை மற்றும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post