Type Here to Get Search Results !

நகை பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 

சர்வதேச சந்தையில், நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் நேற்று ஐயாயிரம் டொலராக பதிவாகியிருந்த நிலையில், இன்று 4,924 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இதற்கமைய, நேற்று ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.35 டொலராக பதிவாகியிருந்த நிலையில், இன்று 73.4 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 

அதன்படி உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம்(17) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad