கைபேசியால் வந்த விபரீதம்- ஒரே நேரத்தில் மூன்று மகள்களை பறிகொடுத்த தந்தை!

கொரிய நாட்டு நாடகங்கள், இணையத்தள விளையாட்டுகள், சமூக வலைத்தளக் காணொளிகள் ஆகியவற்றில் சிறுமிகள் மூவரும் தீவிரமாக மூழ்கியிருந்துள்ளனர். அதனால் அவர்களின் தந்தை மகள்களிடமிருந்து கைப்பேசிகளைப் பறித்து வைத்துள்ளார்.

தங்களது விருப்பமான பொழுதுபோக்கிற்குத் தந்தை தடை விதித்ததால் ஆத்திரமடைந்த சிறுமிகள், விபரீத முடிவு ஒன்றை எடுத்து, ஒன்பதாவது மாடியிலிருந்து குதித்து தங்கள் உயிர்களை மாய்த்து கொண்ட சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துக் கண்ணீர் மல்கப் பேசிய அவர்களின் தந்தை, குழந்தைகளின் நலன் கருதி கைப்பேசியைப் பிடுங்கி வைத்தது ஒரு குற்றமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு செய்தது பாவமா? என்று அவர் உருக்கமாகக் கேட்டது பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது.

இணையப் பயன்பாடு தற்காலச் சிறுவர்களிடம் எத்தகைய மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு அந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.


قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post