தீவிர பாதுகாப்பு வலயத்துக்குள் பாக். இந்தியா மோதல் : குவிக்கப்பட்டுள்ள படையினர்!

தீவிர பாதுகாப்பு வலயத்துக்குள் பாக். இந்தியா மோதல் : குவிக்கப்பட்டுள்ள படையினர், ரசிகர்களிடம் முக்கிய வேண்டுகோள்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

இந்தப் போட்டியில் பங்கேற்பதில்லை என பாகிஸ்தான் அரசு முன்னர் தீர்மானம் எடுத்திருந்தது. எனினும் இலங்கை அரசின் தலையீட்டினால் தீர்மானத்தை மாற்றிக்கொண்டு போட்டியில் விளையாடச் இணங்கியமைக்கு அநுர அரசாங்கம் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கிரிக்கெட் விளையாட்டை ஒரு பாலமாகப் பயன்படுத்த முடியும். நாடுகளுக்கிடையிலான நட்புறவை வளர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறாத சூழல் காணப்பட்டது.

இதற்காக இலங்கை அரசாங்கம் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மட்டங்களில் தலையீடுகளை மேற்கொண்டது. அதன் இறுதி முடிவாக தற்போது இப்போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசி ஊடாக மேற்கொண்ட விசேட கலந்துரையாடலை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு உத்தியோகபூர்வமாகத் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளது.

போட்டி நடைபெறும் தினத்தில் ரசிகர்களின் வருகையினைக் கருத்திற் கொண்டு விசேட போக்குவரத்துத் திட்டமும் பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண மைதானத்திற்கு வருபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு விரைவாக மைதானத்திற்கு வருகைத் தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறைந்தது சுமார் 4 மணித்தியாலங்களுக்கு முன்பாக மைதானத்திற்கு வருகைதருவது சிறந்தது என்றும், போட்டியைப் பார்வையிடுவதற்கான நுழைவு பிற்பகல் 03.00 மணியில் இருந்து ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் இந்தியா பாகிஸ்தான் போட்டி, காரணமாக கொழும்பில் உள்ள முன்னணி ஹோட்டல்களில் அறைகளின் விலைகள் வழக்கமான விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post