வவுனியாவில் கடந்த சில நாட்களாக லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதனால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த சனிக்கிழமையில் இருந்து இந்த தட்டுப்பாட்டு நிலமை காணப்படுவதுடன் நகரத்தில் உள்ள அநேகமான விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர்கள் முற்றாக தீர்ந்துள்ளது. நிறுவனத்தில் இருந்து வருகின்ற லொறிகள் வரவில்லை என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளதுடன் ஒரு சில நாட்களில் அது சீராகும் என தெரிவிக்கின்றனர்.
