இலங்கையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட தங்க விலையேற்றத்தைத் தொடர்ந்து, இன்று தங்கத்தின் விலை நிலையாகக் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு பவுண் 24 கரட் தங்கம் 396,000 ரூபாயாகக் காணப்பட்டது. எனினும், நேற்று முன்தினம் அதன் விலையில் 4,000 ரூபாய் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டது.அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் இன்றைய (25) அறிவிப்பின்படி, இந்த உயர்வடைந்த விலையிலேயே தங்கம் தற்போதும் விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க டொலரின் தளம்பல் நிலை உலக சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
