Type Here to Get Search Results !

இளம் பெண் விபரீத முடிவு

 

 இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாமியார் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதால் 22 வயதான இளம் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கர்நாடகா பீதர் மாவட்டம் பசவகல்யாண் பகுதியில், 22 வயதே ஆன அஞ்சனபாய் என்ற இளம் தாய் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்ள் தெரிவித்துள்ளதாவது,


கடந்த 2022-ம் ஆண்டு சேகர் பாட்டீல் என்பவரை திருமணம் செய்துகொண்ட அஞ்சனபாய்க்கு, தற்போது 11 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று உள்ளது.


இந்நிலையில், திருமணமான நான்கு ஆண்டுகளிலேயே அவர் உயிரிழந்தது இயற்கை மரணம் அல்ல என்றும், அவரது கணவர் குடும்பத்தினர் கொடுத்த அதீத அழுத்தமே காரணம் என்றும் பெண்ணின் தந்தை விஜயகுமார் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.


அஞ்சனபாயின் மாமியார், மருமகளின் அழகைக் குறிப்பிட்டு அவரை சட்டவிரோத பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. வீட்டு வேலைகள் மற்றும் சமையல் சரியாக செய்யவில்லை என்ற காரணத்தைக் கூறி தினந்தோறும் அவரை மனதளவிலும் உடலதளவிலும் துன்புறுத்தியுள்ளனர்.


மாமியாரின் இத்தகைய கீழ்த்தரமான கோரிக்கையை ஏற்க மறுத்த அஞ்சனபாயை, அவரது கணவர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கியதாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பெண் விரக்தியில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அஞ்சனபாயின் கணவர் சேகர் பாட்டீல் உட்பட மூன்று பேரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மாமியாரே, தனது மருமகளை தவறான பாதைக்கு வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

AD