2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) நிகழ்கிறது. இது ஒரு 'வளைய சூரிய கிரகணம்' (Annular Solar Eclipse) ஆகும்.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் மற்றும் கோணங்களின் அடிப்படையில், சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்காமல், அதன் விளிம்புகள் ஒரு பிரகாசமான மோதிரம் போலத் தெரிவதால் இது "நெருப்பு வளையக் கிரகணம்" (Ring of Fire) என்று அழைக்கப்படுகிறது.
அண்டார்டிகாவின் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே இந்த முழுமையான வளையக் காட்சியைக் காண முடியும்.மேலும் ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதிகள், தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிகாவின் ஏனைய பகுதிகளில் இது பகுதி நேரக் கிரகணமாகத் தென்படும்.
அத்துடன் உலகின் மொத்த சனத்தொகையில் சுமார் 2% மக்கள் மாத்திரமே இதனை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சூரிய கிரகணம் அண்டார்டிகாவின் கொன்கோர்டியா நிலையத்தில் (Concordia Station) உள்ளூர் நேரப்படி மாலை 6:48 மணிக்கு ஆரம்பமாகி, 7:47 மணிக்கு உச்சத்தை அடையும்.
மேலும் அடுத்த வளைய சூரிய கிரகணம் 2027 பெப்ரவரி 6 இல் நிகழும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
