க.பொ.த உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

 

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக கல்வி, உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.


இதற்கான புதிய முயற்சியை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,


இதற்கமைவாக க.பொ. த உயர்தரப் பரீட்சையில் அதிக இசட்- புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கே இவ்வாறு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் குறித்த மாணவர்கள் மதிப்புமிக்க சர்வதேச பல்கலைக்கழகங்களில் தங்கள் விருப்பப்படி பட்டப்படிப்புகளைப் தொடர முடியும்.

குறித்த திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டப்படிப்புகளுக்காக மொத்தம் 200 புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், புலமைப்பரிசில் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 32 மாணவர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Related Post
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post