ஆண்கள் மாதத்திற்கு எத்தனை முறை விந்து வெளியேற்ற வேண்டும்? ஹார்வர்டு ஆய்வு சொல்வது என்ன? ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வின் முடிவு ஒரு பெரிய ஆய்வின்படி - மாதத்திற்கு 21 முறை அல்லது அதற்கு மேல் விந்து வெளியேற்றும் ஆண்களுக்கு - புரோஸ்டேட் புற்றுநோய் (PROSTATE cancer) ஏற்படும் அபாயம் சுமார் 20% முதல் 33% வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது! விந்து வெளியேற்றப்படுவதால் - புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள நச்சுகள் மற்றும் தேவையற்ற திரவங்கள் வெளியேற்றப்படுவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்! விந்தணுவின் தரத்திற்கும் உதவும்: விந்து நீண்ட நாட்கள் தேங்கி இருந்தால் - அதன் தரம் மற்றும் இயக்கம் (Motility) குறையக்கூடும்! வாரத்திற்கு 2-3 முறை விந்து வெளியேற்றுவது - பழைய விந்தணுக்களை நீக்கி, புதிய மற்றும் ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தியாக உதவும்! முடிவுரை: மாதம் 21 முறை - அதாவது வாரத்தில் 5-6 முறை - ஆரோக்கியமான ஆண்மைக்கு வழி இது ஆரோக்கியத்திற்கும், விந்தணுவின் தரத்திற்கும் நல்லது என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.
