Type Here to Get Search Results !

சற்று முன் அடுத்து அடுத்து அதிர்ந்த பூமி-கதிகலங்கிய நாடு

 

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் தெரிவிக்கின்றன. பூமிக்கு அடியில் 13 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி மாகாணத்தின் குஸ்தார் நகரத்திலிருந்து வடகிழக்கே 86 கிமீ தொலைவில் இருந்தது என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக காலை 5.52 மணிக்கு குஸ்தாருக்கு தென்கிழக்கே 75 கிமீ தொலைவில் 33 கிமீ ஆழத்தில் 3.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. பலுசிஸ்தானில் உள்ள ஜால் மாக்சி, ஜாஃபராபாத் மற்றும் நசிராபாத் ஆகிய பகுதிகளிலும் சிந்து மாகாணத்தின் பல மாவட்டங்களிலும் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad