இன்று காலை வாழைச்சேனை நகரில் அட்டகாசம் புரிந்த காட்டு யானை பெண் ஒருவர் பலி மூவருக்கு காயம்
பெண்ணொருவர் பலி மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்
இன்று அதிகாலை வாழைச்சேனை பிரதான சந்தை மற்றும் பொது மைதானப்பகுதியில் புகுந்த காட்டு யானை அட்டகாசம் புரிந்துள்ளதுடன் அப்பகுதியில் பயணித்தோர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
அத்துடன், வீதியில் காணப்பட்ட மோட்டார் சைககிள், முச்சக்கர வண்டி மற்றும் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடாத்தி சேதப்படுத்தியுள்ளது.
குறித்த யானையின் தாக்குதலில் நால்வர் காயமடைந்த நிலையில் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட வாழைச்சேனையிலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்த சகோதர தமிழ் இனத்தைச்சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரில் இருவர் பிறைந்துரைச்சேனையைச்சேர்ந்த புஹாரி, ரம்ளார் என அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், காயமடைந்த மற்ற சகோதர தமிழ் இனத்தை வயோதிபர் ஒருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
