நாளை முதல் அதிகரிக்கும் கட்டணங்கள் சற்றுமுன் வெளியானது அறிவிப்பு

 

அஞ்சல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை (09.02.2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. 

அதன்படி, ஆகக்குறைந்த அஞ்சல் கட்டணம் 70 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது