Type Here to Get Search Results !

உலக சந்தையில் தங்க விலை நிலவரம்; இலங்கையிலும் மாற்றம்!

 


உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,106 டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை நேற்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,010 டொலராக பதிவாகியிருந்தது.அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலையும் அதிகரித்து, 84.59 டொலர்களாக பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் இன்று மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன.

இதன்படி, இன்று (21) முற்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் "22 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை 366,300 ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்று (20) அதன் விலை 362,600 ரூபாவாகக் காணப்பட்டது.

இதேவேளை, வெள்ளிக்கிழமை 392,000 ரூபாவாகக் காணப்பட்ட "24 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 396,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

AD