புத்தல பகுதியில் பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் மரத்தன் ஓட்டத்திற்காக ஏனைய மாணவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த #மாணவர் ஒருவர், ஓடிக்கொண்டிருந்த போதே கீழே விழுந்து #உயிரிழந்துள்ளதுள்ளார்.
பயிற்சியின் போது மாணவனுக்கு திடீர் #உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக #சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே குறித்த மாணவன் #உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
