மத்திய கிழக்கில் போர்ச் சூழல் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டதால் துபாயில் பல இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். ஓட்டல் முன்பதிவு முடிந்ததால் தங்க இடமின்றி தவித்தவர்களுக்கு இந்திய வம்சாவளி தொழிலதிபர் யோகேஷ் தோஷி உதவி செய்துள்ளார். தனது 64 குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்தை உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் இலவசமாக வழங்கியுள்ளார். இந்த ஏற்பாட்டால் 125க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்காலிகமாக தங்கும் வசதி பெற்றுள்ளனர்.
