யாழில் நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம் ; பள்ளிவாசலில் தொழுகையின் போது நடந்த சம்பவம்

 

யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் நேற்றிரவு ஒன்றில் தொழுகை இடம்பெறும்போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பாட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்

ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றையதினம் தொழுகை இடம்பெற்றது.

இதன்போது வாளேந்திய நபர் ஒருவர் இன்னொரு இளைஞரை துரத்திக்கொண்டு சென்றவேளை குறித்த இளைஞன் பள்ளிவாசலுக்குள் புகுந்து, அங்குள்ள மதிலால் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது வாளுடன் வந்த சந்தேகநபர், பள்ளிவாசலில் இருந்த இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, வாள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்போது வாளினை கொண்டுவந்த குறித்த சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post