அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நேஷனல் மாலில், அதிபர் டிரம்ப் மற்றும் ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகியோர் 'டைட்டானிக்' பட பாணியில் நிற்பது போன்ற சிலை வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "சீக்ரெட் ஹேண்ட்ஷேக்" என்ற அமைப்பு இந்த சிலையை அங்கு நிறுவியுள்ள நிலையில், இதன் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன. இச்சம்பவம் தற்போது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


