இலங்கையில் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்காக சுவிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த லிட்ரோ நிறுவனம் இலங்கையில் 2026-ஆம் ஆண்டு முழுவதும் தடையற்ற மற்றும் நம்பகமான முறையில் எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்காக, லிட்ரோ எரிவாயு நிறுவனம் (Litro Gas) சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ஜியோ கேஸ் (GeoGas) நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், 4 லட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இலங்கைக்கு இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை நுகர்வோருக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி தொடர்ச்சியாக எரிவாயுவை வழங்க முடியும் என லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதார ரீதியாக எரிவாயு விநியோகத்தை சீராக வைத்திருக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது
