நாட்டில் கடந்த வாரத்தின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (9) தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 377,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அமெரிக்க - இஸ்ரேல், ஈரான் மீது மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை காரணமாக கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதி உச்சத்தை எட்டியிருந்தது. கடந்த வார ஆரம்பித்தில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 388,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேவேளை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 408,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இது கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் பவுன் ஒன்று 420,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது. எவ்வாறாயினும் கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சுமார் 2000 ரூபாவினால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேவேளை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்றைய தினம் 5090 அமெரிக்க டொலர் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
