யாழில் வீடொன்றில் பெண்ணுக்கு அரங்கேறிய சம்பவம்; கணவன் படுகாயம்

 

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (08) நகை கொள்ளை ஒன்று இடம்பெற்றுள்ளது.


இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த கணவனை தாக்கிவிட்டு பின்னர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து சுமார் 5 பவுண் நகையை அவரது கழுத்திலிருந்து அறுத்து எடுத்தனர்.


பின்னர் குறித்த பெண்ணையும் தாக்கியுள்ளதுடன் அரை மணி நேரத்துக்கும் அதிகநேரம் மணலை அள்ளி கொட்டியும், இரும்பாலும் பெண்ணின் கணவரை தாக்கியுள்ளனர்.


இதில் கணவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் இடம்பெற்றபோது மருதங்கேணி பொலிஸார் மற்றும் அவசர இலக்கங்களான 119, 118 ஆகியவற்றிற்கு அழைப்பு மேற்கொண்டு உதவி கோரியும் பொலிஸார் 8 மணிநேரம் கழித்து சரியாக காலை 9 மணிக்கு சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த வீட்டில் நேற்றுடன் மூன்றாவது தடவையாக கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருட்டுச் சம்பவம் சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post