யாழில் 35 வயதான திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயாரான தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் 21 வயதான யுவதியுடன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மனவை மாயமானதால் கணவர் , தன் இரு பிள்ளைகளுடன் தவித்து வருவதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த யுவதி மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்ன்றும், யாழில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளர். அந்த அங்காடிக்குச் சென்றுவரும் குறித்த பெண் வங்கி உத்தியோகத்தர் யுவதியுடன் நட்பானதாகத் தெரியவருகின்றது. பெண் உத்தியோகத்தர் தொலைபேசியில் பொருட்களை கூறி வீட்டுக்கு குறித்த யுவதியை கொண்டு வரச் செய்து பொருட்களைப் பெற்று வந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே இருவரும் தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.பெண் வங்கி உத்தியோகத்தர் தனது கணவனு்க்கு, பிள்ளகைளைப் பராமரிக்க சிரமமாக இருந்தால் தனது இரு பிள்ளைகளையும் தனது தாயிடம் ஒப்படைக்குமாறும் தன்னை தேட வேண்டாம் என்றும் தனக்கு ஆண்களுடன் சேர்ந்து வாழப்பிடிக்கவில்லை என வட்சப் மூலம் தகவலை அனுப்பியுள்ளார். அதன் பின்னர் அவரது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தனது மனைவி வங்கிக்கு வருவது தொடர்பாக கணவன் தனியார் வங்கியில் விசாரித்த போது அவர் தென்பகுதி வங்கி ஒன்றுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாகவும் ஆனால் அவரது தகவல்கள் தரமுடியாது என்றும் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துள்ளார்கள்.கணவராலும் தனது பெற்றோராலும் தனது ஆபத்துள்ளது என குறித்த பெண் உத்தியோகத்தர் வங்கி உயர் பீடத்திற்கு தெரிவித்தே இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் என தெரியவருகின்றது. இதே வேளை தனது மனைவி திருமணமான ஆரம்ப காலத்திலிருந்தே இளம் பெண்கள் மீது நாட்டம் செலுத்தி வந்துள்ளார் என்று தெரிவித்துள்ளதுடன் திருமணத்திற்கு முன்னரே தனது மனைவி இவ்வாறான நாட்டத்தில் இருந்தமை மனைவியின் பெற்றோருக்கு தெரிந்திருந்தும் தன்னை ஏமாற்றி திருமணம் முடிக்க வைத்துள்ளார்கள் என கணவர் குற்றம் சுமத்தியுள்ளதாக கூறப்படுகின்றது . கணவனும் தனியார் நிறுவனம் ஒன்றில் வாகன சாரதியாக உள்ள நிலையில் தற்போது குழந்தைகளை கவனிப்பதற்காக வேலையை விட்டு நிற்கவேண்டிய சூழ்நிலை வந்துள்ளதாகவும் கணவர் கவலை வெளியிட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
