பேருந்தில் பயணம் செய்த போது தவறுதலாக மாறிய பையிலிருந்த 10 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை, உரியவரிடம் ஒப்படைத்த 11ஆம் தர மாணவன் ஒருவரின் முன்மாதிரியான செயல் செகிழவைத்துள்ளது.
தெல்கொட பகுதியிலிருந்து மாலம்பே மாதிரி ஆண்கள் பாடசாலைக்கு பேருந்தில் பயணித்த அகில தேசப்பிரிய என்ற மாணவனின் பாடசாலைப் பை, மற்றுமொரு பயணியின் பையுடன் தவறுதலாக மாறிப்போயுள்ளது.
பாடசாலைக்குச் சென்று தனது பையைத் திறந்து பார்த்த மாணவன், அதற்குள் 5000 ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக இருப்பதைக் கண்டு, உடனடியாக பாடசாலை அதிபர் சிசிர குணரத்னவிடம் தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த பையிலிருந்த வங்கிப் புத்தகம் ஒன்றின் உதவியுடன், சம்பந்தப்பட்ட வங்கியினைத் தொடர்பு கொண்டு பணத்தின் உரிமையாளர் யார் என்பது கண்டறியப்பட்டது.
நுகேகொடைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே அந்தப் பணத்தின் உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மாலம்பே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் முன்னிலையில் 10 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா உரிய ஆசிரியையிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
தனது வீட்டை நிர்மாணிப்பதற்காக வங்கியில் இருந்து ஆசிரியை இந்தப் பணத்தை அவர் எடுத்துச் சென்றுள்ளார்.
வறுமை மற்றும் தேவைகள் நிறைந்த சூழலிலும், பேராசை கொள்ளாமல் நேர்மையாகச் செயற்பட்ட மாணவன் அகில தேசப்பிரியவை பாடசாலைச் சமூகம் மற்றும் பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
