சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்தைப் பதிவு செய்து வருகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையில் காலை நிலவரப்படி, தங்கவிலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3,000 ரூபாயால் தங்கவிலை அதிகரித்துள்ளது.
அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாகவும்
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது
