அஸ்வெசும பயனாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல் ; நாளை கிடைக்கவுள்ள பணம்

Sentamil Admin

 

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அதன்படி 1,408,635 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்காக மொத்தம் 11,179,801,250.00 ரூபாவிற்கும் அதிகமான தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது

இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்காகவும் நாளை 2,350,530,000.00 ரூபாவிற்கும் அதிகமான நிதி வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக அந்தச் சபை மேலும் தெரிவித்துள்ளது.