திடீரென குறைந்த தங்கத்தின் விலை நகைப்பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித்தகவல்


 வளைகுடா போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று (12) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

உலகளாவிய ரீதியில் அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நகர்வுகளாலும் தங்கம் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிவு! | Gold And Silver Prices Declined Global Market
ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,171.26 டொலராக இன்று விற்பனை
அதற்கமைய, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,171.26 டொலராக இன்று விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் வெள்ளியின் விலையிலும் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (12) ஒரு அவுண்ஸ் வெள்ளி 85.35 டொலராக வர்த்தகம் செய்யப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட போதிலும், சர்வதேச ரீதியாக டொலரின் வலுவூட்டல் காரணமாக இலங்கையில் அதன் தாக்கம் மாறுபட்டதாக உள்ளது.

சர்வதேச விலை வீழ்ச்சியடைந்தாலும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மற்றும் இறக்குமதி செலவுகள் காரணமாக, இலங்கையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்றே அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


புத்தம் புதிது
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post