வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

 

பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டத்தை மிகக் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை போக்குவரத்துப் பாவனை மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபர் W.P.G.சேனாதீர தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் நேற்று (8) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.பண்டிகைக் காலங்களில் ஏற்படும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை பண்டிகைக் காலத்தில் ஒரு சிறிய வாகன விபத்து இடம்பெற்றாலும் கூட, அதில் சம்பந்தப்பட்ட சாரதிகள் உடனடியாகப் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

வீதிப் பாதுகாப்பைப் பேணும் வகையில் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post