சூரியபகவான் கிரக மாற்றதால் வாழ்வில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

 

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியபகவான் கிரகங்களின் அதிபதியாக கருதப்படுகிறார். சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமர்ந்தால் அவர்கள் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அடைவார்கள். இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம்.

சூரியன் தன்னம்பிக்கை, அடையாளம் மற்றும் ஆற்றலின் அதிபதியாக இருப்பதால் இந்த கிரக மாற்றத்தால் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அவர்கள் வாழ்க்கையில் அடுத்தகட்டத்தை நோக்கி நகரலாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இது ஒரு சாதகமான காலகட்டமாகும், குறிப்பாக நிதி சார்ந்த விஷயங்களில் இது மிகவும் சிறப்பான காலகட்டமாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்வதற்கோ அல்லது வீடு, வாகனம் போன்ற பெரிய அளவிலான சொத்துக்களை வாங்குவதற்கோ இது ஒரு உகந்த நேரமாகும். சூரியன் ஆசீர்வாதத்தால் அவர்கள் வேலையில் சிறந்து விளங்க முடியும். இதுவரை தடைப்பட்டிருந்த வேலைகள் இப்போது சுமூகமாக முடிவடையும்.

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதியாக சூரியன் இருப்பதால் அவர்கள் இந்த கிரக மாற்றத்தால் நேரடிப் பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உணர்வதுடன், சமூகத்தில் பிறரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடும். அவர்களின் நீண்ட கால ஆசைகள் இப்போது நிறைவேறப்போகிறது. . இந்த ராசிக்காரர்கள் புதிய வழிகளில் பணத்தை முதலீடு செய்ய முடியும். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நிலுவையிலுள்ள பல வேலைகள் இப்போது முடிவுக்கு வரலாம். மே 11-ஆம் தேதிக்குள் அவர்களின் தடைபட்ட முக்கியமான காரியம் ஒன்று நிறைவேறக்கூடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் வணிகத்திலும், வேலையிலும் முன்னேற்றத்தை அடைய முடியும். மேலும், வணிகர்கள் ஒரு பெரிய திட்டம் அல்லது வாடிக்கையாளரால் பயனடைய முடியும். கலைஞர்கள் மற்றும் படைப்புத் துறைகளில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமான மாற்றங்களை அளிக்கும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post