நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு, தீவின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவும்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கு, மத்திய, சபரகமுவ, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
காலையிலும் தெற்கு மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகல மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.அதிகாலை நேரங்களில் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
