பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்கமால் இருக்க முடியாது என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாதது அவர்களின் பெற்றோரின் தவறு என்பதால், அதிகாரிகள் அந்த விஷயத்தில் ஒதுங்கியிருக்க முடியாது. பதிவுத் திணைக்களத்தின் மூலம் பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் நடைமுறை முடியும் வரை, அத்தகைய அனைத்துப் பிள்ளைகளும் பாடசாலைகளில் சேர்க்கப்பட வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க மறுக்க முடியாது என அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
