கடனுக்காக மோதிக்கொண்ட பெண் பொலிஸார்! மின்னேரியாவில் ரணகளம்!"
சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய இடத்திலேயே, சக பெண் பொலிஸார் இருவர் "மல்யுத்தத்தில்" ஈடுபட்ட சம்பவம் மின்னேரியா காவல் நிலையத்தை அதிரவைத்துள்ளது! 😲
வெறும் ஒரு "சிறு கடன்" தான் இந்த போர்க்களத்திற்கு வித்திட்டுள்ளது. ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்கிய வாக்குவாதம், போகப்போக "சவுண்ட்" ஏறி, கடைசியில் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. 📈⚡
காவல் நிலையமே ரணகளமாகும் வகையில் மோதிக்கொண்ட இந்த இரு பெண் உத்தியோகத்தர்களும் காயமடைந்து, தற்போது மின்னேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 🏥🩹
"யூனிபார்ம்" அணிந்திருக்கும் போதே பொது இடத்தில் இவ்வாறு நடந்துகொண்டதற்காக, இருவர் மீதும் தற்போது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன! மேல் அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 👮♂️🚫
