இலங்கை சனத்தொகை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

 

இலங்கையில் ஆண்களை விடவும் பெண்களே அதிகம் தங்களுடைய துணைகளை இழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகைப் போக்கை அவதானிக்கும்போது, ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் கணவனை இழந்தவர்களாக உள்ளனர்.

தேசிய ரீதியாகப் பார்க்கையில், பெண்களில் சராசரியாக 9.4 சதவீதம் பேர் இவ்வாறு தங்களின் துணைகளை இழந்து உள்ளனர்.ஆனால், மனைவியை இழந்த ஆண்களின் விகிதம் வெறும் 1.7 சதவீதமாக மட்டுமே உள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் 2024 சனத்தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையில் துணையை இழந்தவர்கள் குறித்த முக்கியத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இன ரீதியான அடிப்படையில் ஆராயும்போது, பறங்கியர் சமூகத்திலேயே அதிகப்படியான பெண்கள் கணவனை இழந்துள்ளனர்

இச்சமூகத்தில் 10.7 சதவீத பெண்கள் தங்களது துணைகளை இழந்தவர்களாகப் பதிவாகியுள்ளனர்.

இதற்கு மிக நெருக்கமாக, இந்தியத் தமிழர் அல்லது மலையகத் தமிழர் சமூகத்தில் 10.5 சதவீத பெண்கள் கணவனை இழந்துள்ளனர்.

இந்த இரண்டு சமூகங்களிலும் பத்தில் ஒரு பெண் துணையை இழந்திருப்பது சமூக ரீதியாகக் கவனிப்புக்குரிய ஒன்றாகும்.

ஏனைய முக்கிய இனக்குழுக்களான சிங்களவர் மற்றும் இலங்கைத் தமிழர் ஆகிய இரு தரப்பிலும் கணவனை இழந்தவர்களின் விகிதம் சமமாக, அதாவது தலா 9.6 சதவீதமாகக் காணப்படுகிறது. 

இது தேசிய சராசரிக்கு மிக நெருக்கமான ஒரு நிலையாகும்.இதற்கு அடுத்ததாக, மலாய் சமூகத்தில் 10 சதவீத பெண்கள் கணவனை இழந்தவர்களாக உள்ளனர். அனைத்து இனக்குழுக்களையும் ஒப்பிடுகையில், இலங்கைச் சோனகர் (முஸ்லிம்) சமூகத்திலேயே மிகக் குறைந்த அளவிலான கணவனை இழந்த பெண்கள் பதிவாகியுள்ளனர்.

இச்சமூகத்தில் 7.1 சதவீத பெண்கள் மட்டுமே தங்களது துணையை இழந்துள்ளனர். மொத்தத்தில், இலங்கையின் அனைத்து இனக்குழுக்களிலும் மனைவியை இழந்த ஆண்களை விடக் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகவே உள்ளது.

குறிப்பாக இந்தியத் தமிழர் மற்றும் பறங்கியர் சமூகங்களில் இந்தத் தரவுகள் மிக உயர்வாகக் காணப்படுவதால், அந்தச் சமூகங்களில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த மேலதிக அவதானிப்புத் தேவைப்படுவதை இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post