ஹட்டன் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து பிரதான வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதுக்கு பேருந்து சாரதியின் கவனயீனமே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (29) இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மாணவர்கள் உட்பட 34 பேர் காயமடைந்தனர்.மற்றொரு பேருந்துக்கு வழிவிட முயன்றபோது விபத்து
அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த பேருந்து, மற்றொரு பேருந்துக்கு வழிவிட முயன்றபோது பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த சுமார் 34 பேர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் .
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 35 பேர் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், பேருந்தின் சாரதியும் மற்றும் நடத்துனரும் விபத்தில் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் சாரதியின் கவனயீனத்தினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
