ஐரோப்பா கண்டத்தில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் முடிவு; பாபா வாங்கா கணிப்பு!

 கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் நிறைந்த ஐரோப்பா கண்டமானது 2043-ஆம் ஆண்டிற்குள் முஸ்லிம்களால் ஆளப்படும் என்றும், இப்பிராந்தியத்தில் கிறிஸ்தவத்திற்குப் பதிலாக இஸ்லாம் முதன்மையான மதமாக உருவெடுக்கும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.

20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பல்கேரியக் கண் தெரியாத தீர்க்கதரிசியான பாபா வங்கா, கடந்த சில தசாப்தங்களாக நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரங்கள் மீதான செப்டம்பர் 11-ல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் உட்பட உலக வரலாற்றை மாற்றிய பல முக்கிய நிகழ்வுகளைத் துல்லியமாக கணித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றார்.தனது 12-வது வயதில் கண்பார்வையை இழந்த இவர், அதன் விளைவாகவே எதிர்கால நிகழ்வுகளைக் காணும் ஆற்றலைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. 1970-களின் பிற்பகுதியிலும் 1980-களிலும் அவரது கணிப்புகள் பலித்ததன் மூலம் பெரும் புகழை அடைந்தார்.அந்த காலகட்டத்தில் அமானுஷ்ய ஆற்றல்கள் என்று அழைக்கப்பட்ட அவரது தனித்திறன் மூலம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானவராக மாறினார். பாபா வங்கா, 1996-ஆம் ஆண்டு காலமானார்.

இருப்பினும், எதிர்காலம் குறித்த இவர் விட்டுச்சென்ற ஏராளமான தீர்க்கதரிசனங்கள், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் இன்றும் நம்பப்படுகிறது.

இந்நிலையில் எதிர்காலம் குறித்த தனது அதிர்ச்சியளிக்கும் கணிப்புகளில் ஒன்றாக, 2026-ஆம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டத்தின் மக்கள் தொகையும் சுற்றுச்சூழல் மற்றும் புவிசார் அரசியல் காரணங்களால் கணிசமான அளவில் குறையும் என்று பாபா வாங்கா தனது தீர்க்கதரிசனத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாபா வாங்கா மற்றொரு தீர்க்கதரிசனத்தை வெளியிட்டுள்ளார்,அது விரைவில் ஐரோப்பாவின் அடையாளத்தையும், வரலாற்றையும் மாற்றியமைக்கக்கூடும். அதன்படி, கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் நிறைந்த ஐரோப்பா கண்டமானது 2043-ஆம் ஆண்டிற்குள் முஸ்லிம்களால் ஆளப்படும் என்றும், இப்பிராந்தியத்தில் கிறிஸ்தவத்திற்குப் பதிலாக இஸ்லாம் முதன்மையான மதமாக உருவெடுக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

இந்த மிகப்பெரிய மக்கள் தொகை மாற்றத்தின் காரணமாக, இவ்விரு சமூகங்களுக்கும் இடையே ஒரு கலாச்சாரப் போர் வெடிக்கக்கூடும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.

அடுத்த 35 ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் தொகை 70 சதவீதம் வரை உயர்ந்து, 3 பில்லியன் என்ற எல்லையைத் தாண்டும் என்றும்; இதன் மூலம், 2060-ஆம் ஆண்டிற்குள் கிறிஸ்தவ மதத்தை மிஞ்சி, இஸ்லாம் உலகின் மிகப்பெரிய மதமாகத் திகழும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.     

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post