வெளிநாடொன்றில் பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு! பலர் படுகாயம்

 

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச டகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது இன்றையதினம்(14.4.2026) இடம்பெற்றுள்ளது.

 துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 18 வயதுடைய அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் 'ஷொட்கன்' ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி பாடசாலையில் இருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

அத்துடன், தாக்குதலை நடத்திய பின்னர் பாடசாலைக் கட்டிடத்திற்குள் மறைந்திருந்த அவர், அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளார்.இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 பேரில் ஆசிரியர் ஒருவரும் உள்ளடங்குவதோடு, அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post