நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை, இன்று (29) வெளியிடப்பட்டுள்ளது.மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு, நாளை (30) பகல் நேரத்தில் பல பகுதிகளில் "கணிசமான" அளவில் நீடிக்கக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த வெப்பமான வானிலை வடமத்திய, கிழக்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், குருநாகல், மொனராகல, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் நிலவும் என கூறப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்னெச்சரிக்கை மையத்தினால் நாளை (30) தினத்திற்காக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
