l
இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சியில் அரசு சட்டக்கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த மாணவி மணலி முக்கு – தேவக்கல் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, ஸ்கூட்டரில் வந்த இளைஞர் ஒருவர் அவரை பின்தொடர்ந்துள்ளார்.
ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியை அடைந்தபோது, ஸ்கூட்டரை நிறுத்திய அவர், மாணவி முன்பு நிர்வாணமாக நின்றதுடன், அவரிடம் அநாகரிகமாக ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து தப்பி ஓடி அருகிலிருந்த வீட்டில் தஞ்சம் அடைந்தார்.
பின்னர், சம்பவம் தொடர்பாக எடத்தலா பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
குறித்த முறைப்பாட்டில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றச்செயலில் ஈடுபட்டவர் எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுப்புழா அருகே உள்ள ஆணிக்காடு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய அஸ்வின் ராஜீவ் என அடையாளம் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
