நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை, மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமணநாயக்க நேற்று வெளியிட்டார்.
டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களை தொடர்ந்து மக்களுக்கு நேர்த்தியான சேவைகளை வழங்கும் நோக்கில் பொது அவசரகால நிலை கடந்த நவம்பர் 29ஆம் திகதி அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
