ஆசிரியர் சேவையை இந்த நாட்டின் அதிக வருமானம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் உள்வாங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய, ஆசிரியர் சேவையில் உள்ள வேதனப் பிரச்சினைகளைத் தீர்க்க படிப்படியாக வேதன உயர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
