உள்நாட்டு யுத்தத்தால் தமது உயிர்களை நீத்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின், 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை காலை முதல், உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நடைபெறவுள்ளது.
அதன்படி, இன்று காலை ஆறு மணி முதல் 09 மணி வரை, முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில், இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் நடத்தப்படுகின்றன.
