கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இடையே நிலவி வரும் எல்லைப் போர் காரணமாக, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
தற்காலிகப் போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக மக்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது.
கம்போடிய உள்விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்த மாதம் வரை சுமார் 34,440 பேர் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தங்கி வருகின்றனர். இதில் 11,355 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் இருமுறை வெடித்த இந்த மோதலில், இரு தரப்பிலும் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
மேலும், அமெரிக்க - ஈரான் போர் காரணமாக உயர்ந்துள்ள பெற்றோல் விலை, மாணவர்கள் தொலைதூரத்தில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்வதைச் சவாலானதாக மாற்றியுள்ளது.
போர் மீண்டும் தொடங்கும்" என்ற வதந்திகளால் சிறுவர்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லையில் உள்ள பல கிராமங்களைத் தாய்லாந்து இராணுவம் முள்வேலிகள் மற்றும் பெரிய கொள்கலன்கள் மூலம் மறித்து ஆக்கிரமித்துள்ளது.
