தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க விசிக ஆதரவளித்துள்ளதாக சற்றுமுன் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.
இதற்கான கடிதத்தை ஆதவ் அர்ஜுனா ஊடகங்களுக்கு காட்டி வெற்றியென அவர் அறிவித்துள்ளார்.
திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜுனா பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ஆளுநரை நான்காவது முறையாக சந்திக்க தவெக தலைவர் விஜய் நேரம் கேட்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்னும் ஒரு சில நிமிடங்களில் விசிகவின் மிகமுக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் தற்போது விசிக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் விசிக அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் ஏராளமான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
