சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிகரிப்பு பதிவு செய்துள்ளது
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,703.76 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் 26.14 டொலர்கள் (0.55%) அதிகரிப்பாகும்.
இதேவேளை வெள்ளியின் விலையும் இன்று ஏற்றத்தைக் கண்டுள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 88.08 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது 3.11 டொலர்கள் (3.97% )விலையேற்றத்தைக் காட்டுகின்றது.
