இரண்டு நண்பர்களுக்கிடையில் இடம் பெற்ற வாய் தர்க்கம் முரண்பாடாக மாறிய நிலையில் மது போத்தலால் குத்தப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் நேற்று முன்தினம்(25) கரவெட்டி பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
ஆலயம் வேள்வியில் இரண்டு நண்பர்கள் மது அருந்தியதாகவும், இதன் போது இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் முற்றியதில் ஒருவர் மீது சரமாரியான கண்ணாடி சாராய போத்தல் குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் படுகாயமடைந்தவரை உடனடியாக பருத்திதுறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்ணாடி போத்தல் குத்துக்குள்ளாகி காயமடைந்தவருக்கு 150ற்கு மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
.jpeg)