எரிபொருள், உரம் மற்றும் ஏனைய விவசாய இடுபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், அவற்றுக்கு ஈடுகொடுக்கக்கூடிய மாற்று வழிகள் குறித்து விவசாயிகளைத் தெளிவுபடுத்தும் விசேட வேலைத்திட்டம் நாளை (14) ஆரம்பமாகவுள்ளது.
நடைபெறவுள்ள சிறுபோகத்தை இலக்காகக் கொண்டு, “செல்வம் கொண்டுவரும் சிறுபோகம்” என்ற பெயரில் இந்தத் தேசிய விவசாய வேலைத்திட்டத்தை விவசாயத் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது.
இது குறித்து விவசாயத் திணைக்களத்தின் பயிற்சி மற்றும் திட்டப் பணிப்பாளர் சிசிற குமார தெரிவிக்கையில், இந்த விழிப்புணர்வுத் தொடர் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்வைக் கருத்திற்கொண்டு, செலவைக் குறைப்பதற்கான மாற்றுத் தீர்வுகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குதல்
