அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கும் அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்குமான விசேட ஆணைக்குழுவை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அரச துறையில் பல தசாப்தங்களாக நிலவி வரும் வேதன முரண்பாடுகள் மற்றும் தொழில்முறை சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த ஆணைக்குழுவின் ஊடாக தீர்வு காண எதிர்பார்க்கப்படுகிறது.
அரச ஊழியர்களின் வேதன முரண்பாடுகளைக் களைந்து, அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்று நிறுவப்படும் என்ற அறிவிப்பு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)