அம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட மூன்று சிறுவர்கள் காணாமற் போயுள்ளனர்.
அம்பாந்தோட்டை, ஹுங்கம - கலமெட்டிய பிரதேசத்தில் நேற்று(30) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன பிள்ளைகள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பிள்ளைகளைக் கண்டுபிடிக்கும் நோக்கிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
